Regional02

21 வயது குறைந்த ஆணுக்கு திருணம் 5 பேர் மீது போலீஸார் வழக்கு :

செய்திப்பிரிவு

கீழக்கரையில் 21 வயதுக்கு குறைந்த ஆணுக்கு திருமணம் செய்து வைத்த 5 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

கீழக்கரை வடக்குத் தெருவில் மே 22-ம் தேதி 19 வயதுப் பெண்ணுக்கும், 20 வயது ஆணுக்கும் திருமணம் நடைபெற்றது. ஆணின் திருமண வயது 21 என்ற சட்டம் உள்ளது. ஆனால் திருமணம் நடந்த இளைஞருக்கு 21 வயது பூர்த்தியாகவில்லை. இது குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் மாவட்ட சமூக நலத் துறை அலுவலர் அமுதவள்ளி கீழக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தர். அதன்படி போலீஸார் திருமணமான இளைஞரின் குடும்பத்தைச் சேர்ந்த ஹமீது இப்ராஹிம் உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT