Regional01

அறந்தாங்கி அருகே 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் :

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 3 டன் ரேஷன் அரிசி நேற்று பறிமுதல் செய்யப்பட்டது.

அறந்தாங்கி அருகே கூத்தாடி வயல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைக் கப்பட்டுள்ளதாக வந்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, சார் ஆட்சியர் ஆனந்த் மோகன் தலைமையில் வட்டாட்சியர் மார்ட்டின் லூதர்கிங், வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் நேற்று சோதனை செய்தனர்.

அப்போது, தலா 50 கிலோ வீதம் 65 மூட்டைகளில் இருந்த 3,250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டதுடன், இதுகுறித்து விசாரித்து நடவ டிக்கை எடுக்குமாறு புதுக் கோட்டை குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT