திருச்சி எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் மறுவாழ்வு முகாமில் ஒரு யானைக்கு நேற்று கரோனா பரிசோதனை செய்த மருத்துவர்கள். 
Regional01

திருச்சி எம்.ஆர்.பாளையம் முகாமில் - 6 யானைகளுக்கு கரோனா பரிசோதனை :

செய்திப்பிரிவு

திருச்சி எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் மறுவாழ்வு முகாமில் 6 யானைகளுக்கு நேற்று கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

வண்டலூர் வன உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் வனத் துறையின் பராமரிப்பில் உள்ள விலங்குகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் மறுவாழ்வு முகாமில் உள்ள மலாச்சி, இந்து, சந்தியா, ஜெயந்தி, கோமதி, ஜமீலா ஆகிய 6 யானைகளுக்கு நேற்று கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

தலைமை வனப் பாதுகாவலர் ராமசுப்பிரமணியன் மேற்பார்வை யில் மாவட்ட வன அலுவலர் சுஜாதா முன்னிலையில் கோவை யைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையிலான குழு வினர் 6 யானைகளிடம் இருந்தும் சளி மாதிரிகளை சேகரித்தனர். அப்போது உதவி வனப் பாதுகாவலர் சம்பத்குமார், வனச் சரகர் முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் சுஜாதா கூறும் போது, ‘‘யானைகளிடம் இருந்து சேகரிக் கப்பட்ட சளி மாதிரிகள் உத்தர பிரதேசத்தில் உள்ள கால்நடை ஆராய்ச்சி நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அங்கு யானைகளுக்கு கரோனா மற்றும் பிற நோய் கிருமி தாக்கு தல் உள்ளதா என ஆய்வு செய் யப்படும். இதில் வரக்கூடிய முடிவுகளுக்கு ஏற்ப அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும்’’ என்றார்.

SCROLL FOR NEXT