Regional01

அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் :

செய்திப்பிரிவு

அங்கன்வாடி திட்டத்தை தனியார் மயமாக்குதல், அங்கன்வாடிக்கு ஒதுக்கப்படும் நிதியில் 30 சதவீதம் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளைக் கண்டித்தும், முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவி யாளர்கள் சங்கம் சார்பில் கரூர் மாவட்டத்தில் நேற்று அகில இந்திய எதிர்ப்பு நாளாக கடைபிடித்து போராட்டம் நடத் தப்பட்டது. இதில், மாநிலத் தலைவர் ரத்தினமாலா உட்பட மாவட்டம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அங்கன் வாடி ஊழியர்கள், உதவியாளர் கள் அவரவர் வீடுகளின் முன்பு கோரிக்கை பதாகைகளை ஏந் தியபடி பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT