Regional02

புதுச்சேரியில் இருந்து மது கடத்தி வந்த 8 பேர் கைது :

செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் திட்டச்சேரி பிரதான சாலையில் போலீஸார் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை சந்தேகத்தின்பேரில், போலீஸார் மறித்து சோதனை நடத்தினர். இதில், 5 மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் 5 மூட்டைகளில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள சாராயம் மற்றும் மதுபான பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

போலீஸார் நடத்திய விசாரணையில், மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள், திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் குந்தலூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த செந்தமிழ்செல்வன் (21), ராஜேஷ்குமார் (26), திருக்கண்ணமங்கை நடுத் தெருவைச் சேர்ந்த கவியரசன் (22), மஞ்சக்குடி சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த முகேஷ் (24), தர்மகோயில் தெருவைச் சேர்ந்த அசோக்குமார் (45), ஆணை தென்பாதி பகுதியைச் சேர்ந்த பாபுராஜ் (28), சதீஷ்குமார் (28), நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பாக்கம் கோட்டூர் மேலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ்(27) ஆகியோர் என்பதும், இவர்கள் 8 பேரும் திருவாரூர் மாவட்ட பகுதிகளில் விற்பதற்காக புதுச்சேரி மாநிலத்திலிருந்து மோட்டார் சைக்கிள்களில் மதுபானங்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, திட்டச்சேரி சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீஸார் அவர்களிடம் இருந்த 5 மூட்டை சாராயம், மதுபான பாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய 5 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT