திருநெல்வேலியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து பாதுகாப்பு கவச உடையணிந்து காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
Regional02

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் :

செய்திப்பிரிவு

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலியில் வண்ணார்பேட்டையில் உள்ள பெட்ரோல் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். முன்னாள் மத்திய இணையமைச்சர் ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் கண்டன உரையாற்றினார். மாநகர மாவட்ட பொருளாளர் ராஜேஷ்முருகன், மாவட்டச் செயலாளர் பரணி இசக்கி, மண்டல தலைவர் கெங்கராஜ் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் பங்கேற்ற பலரும்கரோனா தடுப்பு கவச உடை அணிந்திருந்தனர். மேலும் பெட்ரோல், டீசல்விலை உயர்வை எதிர்த்து இருசக்கர வாகனத்துக்கு மாலை அணிவித்திருந்தனர். இதுபோல மானூர், சங்கர்நகர், நாரணம்மாள்புரம் உள்ளிட்ட 11 இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

தென்காசி

கன்னியாகுமரி

தூத்துக்குடி

எட்டயபுரம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி தலைமையிலும், முத்தையாபுரம் பெட்ரோல் பங்க் முன்பு முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் சகாயராஜ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சாயர்புரத்தில் வைகுண்டம் தொகுதி எம்எல்ஏ ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் தலைமையில் மாட்டு வண்டியில் ஏறி நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி

கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் உள்ள உள்ள பெட்ரோல்பங்க் முன்பு வட்டார காங்கிரஸ் தலைவர் ரமேஷ் மூர்த்தி தலைமையிலும், கடம்பூரில் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் அய்யலுசாமி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

SCROLL FOR NEXT