ஆட்டோக்களுக்கு இ-பாஸ் முறையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த வேலூர் மாவட்ட ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர்.படம்: வி.எம்.மணிநாதன். 
Regional02

ஊரடங்கால் வாகனங்களின் காப்பீட்டை நீட்டிக்க வேண்டும் : ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை

செய்திப்பிரிவு

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர் மாவட்ட ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சிம்புதேவன் தலைமையில் நேற்று அளிக்கப்பட்ட மனுவில், ‘‘தமிழகத்தில் கரோனா காலத் தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் ஆட்டோக்களில் இரண்டு பேர் பயணிக்க அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. ஆனால், இ-பதிவுடன் ஆட்டோவில் பயணிக்க வேண்டும் என்ற அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இ-பதிவை ஆட்டோ உரிமையாளர் எடுக்க வேண்டுமா? அல்லது அதில் பயணம் செய்பவர் எடுக்க வேண்டுமா? என்பதில் குழப்பம் உள்ளது. எனவே, இ-பதிவு இல்லா மல் ஆட்டோவில் பயணிக்கலாம் என அறிவிக்க வேண்டும்.

ஊரடங்கு காலத்தில் ஆட்டோ, கார், வேன் ஓட்டுநர்கள் நெருக்கடி யான சூழலில் குடும்பத்தை நடத்துகின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் கரோனா நிவாரணமாக ரூ.7,500 வழங்க வேண்டும். வாகனங்களுக்கு எப்சி, சாலை வரி, ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் காலம் உள்ளிட்டவற்றை இந்தாண்டு டிசம்பர் வரை நீட்டிக்க வேண்டும். 2020-21 ஆண்டுகளில் ஊரடங்கால் விபத்துகள் குறைந் துள்ளது. இன்சூரன்ஸ் நிறுவனங் களுக்கு இழப்பு ஏற்பட வில்லை. வாகனங்கள் இயங்காத போதும் வாகன உரிமையாளர்கள் காப்பீட்டு தொகையை செலுத்தி இருப்பதால் செலுத்திய காப்பீட்டை நீட்டிக்க வேண்டும் என்பதை காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு வழிகாட்ட தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT