Regional02

ஆபாச படத்தை வைத்து பணம் கேட்டு மிரட்டியவர் கைது :

செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதிக்குட்பட்ட கிராமத்தில் வசிப்பவர் நவீன்குமார் (21). தனது முகநூல் பக்கத்தில் கல்லூரி தோழியின் சகோதரரின் முகநூல்கணக்குக்கு கல்லூரி தோழியின் ஆபாச புகைப்படத்தைஅனுப்பி ரூ. 55 லட்சம் கேட்டுள்ளார். பணம்தரவில்லையெனில், சமூக வலைதளங்களில் ஆபாச படத்தை பதிவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி சைபர் கிரைம்போலீஸார் விசாரணை மேற்கொண்டு, நவீன்குமாரை நேற்றுகைது செய்தனர்.

கைதானவர், அந்த பெண்ணை ஒருதலையாககாதலித்ததாகவும், கடன் பிரச்சினையால் அந்த பெண்ணுக்கே தெரியாமல் இப்படி செய்திருப்பதும் தெரியவந்தது.

SCROLL FOR NEXT