Regional02

மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணம் வழங்கல் :

செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டம் உதகையிலுள்ள ஏழை, எளியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுமார் 500 பேருக்கு காய்கறிப் பொருட்கள் உள்ளடக்கிய தொகுப்புகளை உதகை காய்கறிகள் வியாபாரிகள் சங்கத்தினர் வழங்கினர். உதகை மத்திய பேருந்து நிலையத்தில் நடந்த நிகழ்வில் உதகை நகராட்சி ஆணையர் சரஸ்வதி, காவல் ஆய்வாளர் ராஜன்பாபு, வியாபாரிகள் சங்கத் தலைவர் கே.ஏ.முஸ்தபா, செயலாளர் ஜே.ரவிகுமார் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT