Regional02

இரிடியம் மோசடி வழக்கில் மேலும் 2 பேர் கைது :

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அண்ணா நகரைச் சேர்ந்தவர் அன்பரசு (26). இவரிடம் இரிடியம் தருவதாக ரூ.10 ஆயிரம் பெற்ற ஓசூரைச் சேர்ந்த மஞ்சுநாத், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த கரகூரைச் சேர்ந்த பொக்லைன் ஓட்டுநர் ராஜா (32), சேலம் மாவட்டம், முத்துநாயக்கனஹள்ளியைச் சேர்ந்த சரவணன் ஆகியோர் மோசடி செய்தனர்.

இதுதொடர் பான புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், ராஜாவை கைது செய்தனர்.

மேலும், தலைமறை வாக இருந்த மஞ்சுநாத், சரவணன் ஆகியோரை நேற்று போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT