Regional02

திண்டிவனம் அருகே கார் விபத்து: டிஐஜி உட்பட 3 பேர் தப்பினர் :

செய்திப்பிரிவு

மதுரை சிறைத்துறை டிஐஜி பழனி பணி நிமித்தமாக நேற்று மதுரையில் இருந்து காஞ்சிபுரத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். காரை மதுரையை சேர்ந்த வீரசேரன் என்பவர் ஓட்டி வந்தார்.காரில் ஒரு பாதுகாவலரும் அமர்ந்து வந்தார்.

நேற்று மாலை திண்டிவனம் அருகே திருவண்ணாமலை சாலையில் ஒரத்திசாலை சந்திப்பில் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர சிறிய பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிஐஜி பழனி உட்பட 3 பேரும் சிறு காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

SCROLL FOR NEXT