ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர். படம்: எல்.பாலச்சந்தர் 
Regional02

கரோனா நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை கோரி - ராமநாதபுரம் அரசு மருத்துவமனையை பெரியார் இயக்கத்தினர் முற்றுகை :

செய்திப்பிரிவு

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தைக் கண்டித்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்துக்கு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நாகேசுவரன் தலைமை வகித்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா உள்ளிட்ட பல்வேறு நோய் பாதிப்புகளால் சிரமப்படும் நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படவில்லை. இங்கு தினமும் 10-க்கும் மேற்பட்டோர் மரணமடைகின்றனர். மருத்துவர் ஒருவர் மருந்து, மாத்திரைகளை திருடி தனது தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறார். இதை நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டோர் புகார் தெரிவித்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டலச் செயலாளர் யாசின், வைகை பாசன விவசாயிகள் சங்க நிர்வாகி மதுரைவீரன், ஆதித்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், மாவட்டச் செயலாளர் இரணியன், அம்பேத்கர் பெரியார் இயக்க நிர்வாகி முனீஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT