சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருநங்கையர் களுக்கு கரோனா உதவித்தொகையை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார். உடன் ஆட்சியர் கார்மேகம் உள்ளிட்டோர். 
Regional01

சேலம் மாவட்டத்தில் திருநங்கையர்கள் 603 பேருக்கு கரோனா உதவித்தொகை வழங்கல் :

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் திருநங்கையர்கள் 603 பேருக்கு தலா 2 ஆயிரம் வீதம் கரோனா உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

திருநங்கையர்களுக்கு கரோனா உதவித்தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டார். இதையடுத்து, சேலம் மாவட்டத்தில் 603 திருநங்கையர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.12 லட்சத்து 6 ஆயிரம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஆட்சியர் கார்மேகம், எம்பி-க்கள் பார்த்திபன் (சேலம்), செந்தில்குமார் (தருமபுரி), சின்ராஜ் (நாமக்கல்), எம்எல்ஏ ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, திருநங்கையர்களுக்கு கரோனா உதவித்தொகையை வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், மாவட்ட சமூக நல அலுவலர் கார்த்திகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT