Regional02

குளிர்பானக் கடைகளில் குட்கா விற்ற 2 பேர் தூத்துக்குடியில் கைது :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி டிஎஸ்பி கணேஷ் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வேல்ராஜ் தலைமையிலான தனிப்படையினர் நேற்று மேற்கு காட்டன் சாலை பகுதியில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர்.

அப்போது எஸ்.எஸ் பிள்ளை மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் (39) மற்றும் செல்வகுமார் (49) ஆகியோருக்கு சொந்தமான குளிர்பானக் கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் அதிகளவில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இருவரையும் கைது செய்த போலீஸார், கடைகளில் இருந்த 7,574 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மத்திய பாகம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT