Regional01

ரேஷன் பொருட்கள் விநியோகம் பற்றி புகார் தெரிவிக்க சிறப்பு கட்டுப்பாட்டு அறை :

செய்திப்பிரிவு

ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் தொடர்பாக புகார் தெரிவிக்க வசதியாக, ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இதனை திறந்துவைத்து, மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்ட ரேஷன் கடைகளில், அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவது குறித்த புகார்களைத் தெரிவிக்க, பொது விநியோக சிறப்பு கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது, வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். இங்கு வரும் புகார்கள் தனி பதிவேடு மூலம் பதிவு செய்யப்பட்டு உரிய தீர்வு காணப்படும். இக்கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சியரின் நேரடி கண்காணிப்பில் செயல்படும்.

ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம், குடும்ப அட்டை தொடர்பான புகார்கள், அது தொடர்பான சந்தேகங்களை தீர்க்க இக்கட்டுப்பாட்டு அறை உதவியாக இருக்கும். 93424 71314 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, வாட்ஸ்அப் மூலம் புகார்களை தெரிவிக்கலாம் என்றார் ஆட்சியர்.

மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எம்.கணேஷ்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் குழந்தைசாமி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தி.நவாஸ்கான், மாவட்ட ஆட்சியரின் அலுவலக மேலாளர் வெங்கடாச்சலம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT