வெள்ளத்தில் சிக்குவோரை மீட்பது தொடர்பான ஒத்திகை, திருநெல்வேலி வண்ணார்பேட்டை பேராத்து செல்விஅம்மன் கோயில் அருகே தாமிரபரணி ஆற்றில் நடைபெற்றது.
மாவட்ட வருவாய்த்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் பங்கேற்றனர். பருவமழையின்போது திடீர் வெள்ளம் ஏற்பட்டால் எவ்வாறு பொதுமக்கள் தங்களை காப்பாற்றி கொள்வது, தீயணைப்பு துறையின் உதவியை விரைந்து எவ்வாறு பெறுவது, தீயணைப்பு துறை வருவதற்கு முன்பாகவே தங்கள் இல்லங்களில் அல்லது சுற்றுப்புறங்களில் உள்ள பொருட்களை வைத்து அதனை மிதவைப் பொருட்களாக மாற்றி எவ்வாறு மீட்பது என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் மற்றும் பணியாளர்கள் மற்றும் வருவாய்த் துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.