தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு கடந்த 2 நாட்களாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 881 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 1,181 கனஅடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 750 கனஅடி நீர் தொடர்ந்து திறந்துவிடப்படுகிறது. நேற்று முன்தினம் 96.77 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 96.78 அடியாக உயர்ந்தது. அணையின் நீர் இருப்பு 60.74 டிஎம்சி-யாக உள்ளது.