Regional02

நகைக்கடையில் ஒலித்த அலாரம் : போலீஸார் ஆய்வு :

செய்திப்பிரிவு

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம்அருகே ஏராளமான நகைக்கடைகள் உள்ளன. ஊரடங்குகாரணமாக இவை தற்போது மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் அங்குள்ள நகைக்கடை ஒன்றில் இருந்து நேற்று காலை அலாரம் ஒலித்தது.

இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அப்பகுதியினர், கடையின்உரிமையாளருக்கு தகவல் அளித்தனர். தெற்கு போலீஸாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

தொடர்ந்து, உரிமையாளர் மற்றும் போலீஸார் கடையை திறந்து உள்ளே சென்றனர். அப்போது அலாரம் வைத்துள்ள பகுதியில் இருந்த வயர்களை எலிகள் கடித்ததால் அலாரம் ஒலித்திருப்பது தெரியவந்தது.

SCROLL FOR NEXT