Regional02

இளைஞர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது :

செய்திப்பிரிவு

திருப்பூரில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், மேலும் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் தென்னம்பாளையம் உழவர் சந்தை அருகே உள்ள ஏபிடி சாலையில், கடந்த 2-ம் தேதிஇளைஞரின் சடலம் கிடந்தது தொடர்பாக மத்திய போலீஸார் விசாரித்தனர். அதில்,திருப்பூர் எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த சம்சுதீன் (25) என்பது தெரியவந்தது.

முன்விரோதம் மற்றும் பணம் கொடுக்கல்,வாங்கல் தொடர்பாக, நண்பர்கள் 5 பேர் சேர்ந்து, சம்சுதீனை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து திருப்பூர் கருவம்பாளையத்தை சேர்ந்த கார்த்திக் (25), இக்ரம் (25), ஜீவா நகரை சேர்ந்த தேவாசரண் (21) ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த திருப்பூர் தெற்கு தோட்டத்தை சேர்ந்த ஆதித்யா (20) என்பவரை நேற்று போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT