Regional02

யூடியூப்பை பார்த்து சாராயம் காய்ச்சிய இளைஞர் கைது :

செய்திப்பிரிவு

ராமநாதபுரம் அருகேயுள்ள காட்டூரணி எம்.ஜி.ஆர். நகரில் சாராயம் காய்ச்சப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கேணிக்கரை போலீஸார் நடத்திய சோதனையில், எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த மகாராஜா (65) என்பவரது வீட்டின் அருகில் சாராய ஊறல் இருந்ததைக் கண்டறிந்தனர். அங்கிருந்த 20 லிட்டர் சாராயத்தை போலீஸார் அழித்தனர். இதுதொடர்பாக மகாராஜாவின் மகன் சக்தியை (21) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய மகாராஜாவை போலீஸார் தேடி வருகின்றனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில் யூடியூப்பை பார்த்து தந்தையும், மகனும் சாராயம் காய்ச்சியது தெரிய வந்தது.

SCROLL FOR NEXT