தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவி புனிதா வெளியிட்ட கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சிறுமி புனிதா தனது தந்தை மாயாண்டி கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதை வீடியோவாக பதிவு செய்து, அதில் 'நாங்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு, எனது தந்தை தடுப்பூசி போட்டுள்ளார். எனவே, எல்லோரும் கண்டிப்பாக தடுப்பூசி போடுங்கள்' என பேசி வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் சிறுமி புனிதாவை ஆட்சியர் அலுவலகத்துக்கு வரவழைத்து பரிசு வழங்கி பாராட்டினார்.