புதுக்கோட்டை மாவட்டம் குப்பக்குடி ஊராட்சி கல்யாணபுரத்தில் நேற்று மரக்கன்று நடுகிறார் மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன். 
Regional01

தமிழகத்தை பசுமையாக மாற்றிட ஊரடங்கின்போது - ஒவ்வொருவரும் 5 மரக்கன்றுகளை நட வேண்டும் : சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கில் முடங்கி யுள்ள அனைவரும் தலா 5 மரக் கன்றுகளை நட்டால் தமிழகத்தை பசுமையாக மாற்றிவிடலாம் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அரசு மருத் வமனையில் நேற்று ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா மற்றும் ஆலங்குடி அருகே குப்ப குடி ஊராட்சி கல்யாணபுரத்தில் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழாவில் அவர் பேசியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் சராசரி ஆண்டு மழை பொழிவானது கடந்த 10 ஆண்டுகளில் படிப் படியாக குறைந்து வருகிறது. வரும் 5 ஆண்டுகளில் இந்த மாவட் டத்தில் பல லட்சக்கணக்கான மரங்கள் நடப்பட்டு சூற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். இதன் மூலம் தமிழகத்தில் அதிக மழை பொழி வுள்ள மாவட்டமாக புதுக்கோட்டை மாற்றப்படும்.

குறிப்பாக யூக்கலிப்டஸ், சீமைக் கருவேல மரங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டு, புங்கன், வேம்பு போன்ற நாட்டு மரக்கன்றுகள் நடப்படும். கரோனா ஊரடங்கில் முடங்கியுள்ள அனைவரும் தலா 5 மரக்கன்றுகள் வீதம் நட்டு பராமரித்தால் தமிழகத்தை பசுமையாக மாற்றிவிடலாம்.

புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் இருசக்கர வாகனங்கள் மூலம் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. எனவே, இருசக்கர வாகனங்களில் தேவையற்ற பய ணங்களை குறைக்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில், எம்எல்ஏ எம்.சின்னதுரை, மாவட்ட சுகாதார இணை இயக்குநர் ராமு, ஆசிரியர் முன்னேற்ற சங்க ஒருங் கிணைப்பாளர் ஆ.மணிகண்டன், மரம் அறக்கட்டளை தலைவர் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT