Regional01

நெல்லையில் 6-வது நாளாக தடுப்பூசி தட்டுப்பாடு : பொதுமக்கள் ஏமாற்றம்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு நேற்று 6-வது நாளாக நீடித்தது. தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டிருந்ததால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

25 சிறப்பு மையம்

இந்நிலையில், தமிழகம் முழுவ தும் தடுப்பூசி தட்டுப்பாடு இருக்கும் நிலையில் திருநெல்வேலி மாவட்டத்திலும் கடந்த 6 நாட்களாக தடுப்பூசி செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தடுப்பூசி மையங்கள் முன், தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இம்மையங்களுக்கு வருவோரை, தடுப்பூசி மருந்து கையிருப்பில் இல்லை என்று, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

SCROLL FOR NEXT