Regional01

காரையாறில் இறந்து கிடந்த யானை :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டம் காரையாறில் இருந்து பொதிகை மலை செல்லும் வழியில் உள்ள இஞ்சிகுழி பகுதியில் பெண் யானை இறந்து கிடந்தது.

இதுகுறித்து காணி குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் அங்கு சென்று பார்வையிட்டனர். வனத்துறை மருத்துவர்கள் மூலம் பிரேத பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. யானை தவறி விழுந்ததில் உயிரிழந்திருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த 15 நாட்களுக்கு முன் பாபநாசம் அணைப்பகுதியில் பெண் குட்டி யானை இறந்து அழுகிய நிலையில் கிடந்தது. அந்த குட்டியை தேடி வந்த இடத்தில் நீர்சுழலில் சிக்கி தாய் யானை இறந்திருக்கலாம் என்றும் வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT