Regional02

பட்டா பெயர் மாற்றம் செய்ய - லஞ்சம் வாங்கிய விஏஓ சஸ்பெண்ட் :

செய்திப்பிரிவு

பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய பெண் விஏஓபணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.

பொன்னை கிராம நிர்வாக அலுவலர் கவிதா பட்டா பெயர் மாற்றம் செய்ய வெங்கடேசன் என்பவரிடம் லஞ்சம் வாங்கிய போது கையும், களவுமாக லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல் துறையினரிடம் சிக்கினார். இதைத்தொடர்ந்து, அவரை கைது செய்த காவல் துறையினர் கவிதாவை பெண்கள் தனிச்சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கவிதாவை பணியிடை நீக்கம் செய்து, வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கணேஷ் உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT