Regional02

சாராயம் விற்ற இருவர் கைது :

செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டம் மங்கலத்தை அடுத்த பெத்தாம்பூச்சிபாளையம் அருகே அய்யன்கோயில் பகுதியில் வாகனத்தில் சாராயம் விற்பதாக மாவட்ட மதுவிலக்கு போலீஸாருக்குதகவல் கிடைத்தது. இதையடுத்து,அப்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் சோதனை மேற்கொண்டனர். ஒரு லிட்டர் அளவுகொண்ட 20 பாட்டில்களில் சாராயம்இருப்பதை கண்டறிந்தனர். இதைத்தொடர்ந்து கார், ஓர் இருசக்கர வாகனம், ரூ.1,300 ரொக்கம் ஆகிய வற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சுப்பிரமணியன் (65), முருகன் (29) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

SCROLL FOR NEXT