கடலூர் பெரியகங்கணாங்குப்பம் பகுதியில் புதுச்சேரியில் இருந்து வரும் வாகனங் களை போலீஸார் சோதனை செய்தனர். 
Regional01

புதுச்சேரியில் மதுபான கடைகள் திறப்பு - கடலூர் மாவட்ட எல்லையில் போலீஸார் வாகன சோதனை :

செய்திப்பிரிவு

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மளிகை, காய்கறி கடைகள், மெக்கானிக்கடை, எலக்ட்ரிக்கல் கடை உள்ளிட்ட கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்துக்கு அருகே உள்ள புதுச்சேரி மாநிலத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்டிருந்த மதுபான கடைகளை நேற்று திறக்க புதுச்சேரி மாநில அரசு உத்தரவிட்டது. ஆனால் தமிழகத்தில் மதுபான கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் கடலூர் மாவட்ட எல்லையில் உள்ளவர்கள் புதுச்சேரிக்கு சென்று மது வகைகளை வாங்கி வந்து குடிப்பார்கள், சிலர் அதிக விலைக்கு விற்பனையும் செய்வர்.

இதைத் தடுக்கும் வகையில் கடலூர் மாவட்ட எல்லையான பெரியகங்கணாங்குப்பம், ஆல்பேட்டை சோதனைச்சாவடி, உண்ணாமலைசெட்டி சோத னைச்சாவடி, மருதாடு, வான்பாக்கம், மேல்பட்டம்பாக்கம் ஆகிய சோதனைச்சாவடிகளில் நேற்று காலை முதல் புதுச்சேரி பகுதியில் இருந்து வரும் கார், இருசக்கர வாகனம், ஆட்டோ ஆகியவற்றை சோதனை செய்து அனுப்பி வைத்தனர். இந்த சோதனையில் போலீஸார் வாகனங்களில் மதுபாட்டில்கள் கடத்தப்படுகிறதா? என்பதையும், உரிய பதிவு செய்து பயணம் செய்கின்றனரா? என்பதை தான் பார்க்கின்றனர்.

SCROLL FOR NEXT