மண்ணச்சநல்லூரில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணிகளை நேற்று முன்தினம் பார்வையிடுகிறார் எம்எல்ஏ எஸ்.கதிரவன். 
Regional01

மண்ணச்சநல்லூரில் - கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி :

செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல் லூர் நகரப்பகுதியிலுள்ள கழிவுநீர் கால்வாய்களில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறாமல் தேங்கிக் கொள்வதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். சுகாதார சீர்கேடும் நிலவியது. இந்த கழிவுநீர் கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்கு மாறு மண்ணச்சநல்லூர் மக்கள் அத்தொகுதி எம்எல்ஏ எஸ்.கதிர வனிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து கழிவுநீர் கால்வாய்களை தூர்வார நடவ டிக்கை எடுக்குமாறு மண்ணச் சநல்லூர் பேரூராட்சி நிர்வாகத் துக்கு எம்எல்ஏ கதிவரன் உத்தரவிட்டார். அதன்பேரில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணிகள் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்டன. அதை எம்எல்ஏ கதிரவன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.அவருடன் மண்ணச்சநல்லூர் ஒன்றிய திமுக செயலாளர்கள் இளங்கோவன், செந்தில், ராமச் சந்திரன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் செந்தில், முன்னாள் பேரூராட்சித் தலைவர் அஜய் தர் உள்ளிட்டோர் சென்றனர்.

SCROLL FOR NEXT