திருச்சி மாநகராட்சியில் இதுவரை 10,083 மீட்டர் நீளத்துக்கு வடிகால்கள் தூர்வாரப்பட்டுள் ளது என மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன் தெரிவித் துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்ட செய்திக்குறிப்பு: திருச்சி மாநகராட்சி பகுதியில் உள்ள மழைநீர் வடிகால்களை பருவ மழை தொடங்குவதற்கு முன்பாக சுத்தம் செய்ய வேண்டும் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச் சர் கே.என்.நேரு உத்தரவிட்டி ருந்தார்.
இதைத் தொடர்ந்து திருச்சி மாநகராட்சியில் கோ.அபிஷேக புரம் கோட்டத்தில் 30 மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் 2,870 மீட்டர் நீளத்துக்கும், ரங்கம் கோட்டத்தில்11 மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் 755 மீட்டர் நீளத்துக்கும், பொன்மலை கோட்டத்தில்16 மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் 3,920 மீட்டர் நீளத்துக்கும், அரியமங்கலம் கோட்டத்தில் 23 மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் 2,538 மீட்டர் நீளத்துக்கும் என 10,083 மீட்டர் நீளத்துக்கு தூர்வாரப்பட்டுள்ளது.
உதவி ஆணையர்கள் தலைமையில் குழுக்கள் அமைத்து தெருக்கள் வாரியாக தூர்வாரும் பணி திட்டமிடப்பட்டு, தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. மீதமுள்ள பணிகள் மழைக் காலம் தொடங்கும் முன் முடிக்கப்படும் என தெரிவிக் கப்பட்டுள்ளது.