Regional01

அரசுப் பள்ளி தூய்மை பணியாளருக்கு சம்பளம் வழங்க கோரிக்கை :

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணி யாற்றும் தூய்மை பணியாளர் களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் த.ஜீவன் ராஜ், புதுக்கோட்டை ஆட்சியர் பி.உமா மகேஸ்வரிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

புதுக்கோட்டை மாவட் டத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1,400 தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சம்பளம் வழங்கப்படவில்லை.

இதனால், இவர்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பேரிடர் காலத்தில், பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இவர்களுக்கான சம்பளத்தை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

SCROLL FOR NEXT