Regional01

நெல்லையில் 100 வீடுகளுக்கு ஒரு கிராம சுகாதார பணியாளர் : மாவட்ட ஆட்சியர் தகவல்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரோனா பாதிப்புக்கு உள்ளாகி வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் பொதுவெளியில் இயங்காமல் தங்களை முழுமையாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். குணமடைந்தவர்களும் தொடர்ந்து 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கரோனா தொடர்பான சந்தேகங்களை, திருநெல்வேலி மாவட்ட கட்டுப்பாட்டு அறை உதவி எண்கள் 0462 - 2501012, 0462- 2501070, 9499933893, 6374013254 ஆகியவற்றில் தொடர்புகொண்டு விளக்கம் பெறலாம்.

நோய் அறிகுறி இருந்தால் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

தொற்று உறுதி செய்யப்பட்ட வர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் உடனடியாக கிடைக்க வேண்டும்.

இதைக் கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் சார்பாக 100 வீடுகளுக்கு ஒரு கிராம சுகாதார பணியாளர் வீதம் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 100 வீடுகளுக்கும் தினமும் சென்று, தொற்று அறிகுறி, உடல் வெப்பநிலை மற்றும் ஆக்சிஜன் நிலை ஆகியவற்றை பரிசோதனை செய்வார்கள். இதன் மூலம் நோய் பரவலை எளிதில் கண்டறிந்து கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT