Regional01

அம்முண்டியில் 40.2 மி.மீ மழை பதிவு :

செய்திப்பிரிவு

வேலூர் மற்றும் ராணிப் பேட்டை மாவட்டத்தில் வெப்பச் சலனத்தின் காரணமாக நேற்று முன்தினம் இரவு ஆங்காங்கே பரவலான மழை பெய்தது. தொடர்ந்து இரண்டாவது நாளாக மழை பெய்தது.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி அதிகபட்ச மழைப் பதிவாக வேலூர் மாவட்டம் அம்முண்டியில் உள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியில் 40.2 மி.மீ மழை பதி வாகி இருந்தது. காட்பாடியில் 4.5, பொன்னையில் 24.4, வேலூரில் 25.4, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் 3.2, ஆற்காட்டில் 11, சோளிங்கரில் 26.4, வாலாஜாவில் 1.2, அம்மூரில் 16, கலவையில் 26.2 மி.மீ மழை பதிவாகியுள்ளன.

SCROLL FOR NEXT