பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் இளம் வீராங்கனையான கோகோ காஃப் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் துனிசியாவின் ஆன்ஸ் ஜாபூரை எதிர்த்து காஃப் விளையாடினார். 53 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் காஃப் 6-3, 6-1 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் கடந்த 15 வருட காலத்தில்பிரெஞ்சு ஓபன் தொடரின் கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இளம் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் காஃப். அவருக்கு தற்போது 17 வயது 86 நாட்கள் ஆகிறது. இதற்கு முன்னர் பிரெஞ்சு ஓபன் தொடரில்கடந்த 2006-ம் ஆண்டு இளம் வீராங்கனையாக செக் குடியரசின் நிக்கோல் வைடிசோவா (17 வயது 44 நாட்கள்) கால் இறுதிச் சுற்றில் கால்பதித்திருந்தார்.
மேலும் 1993-ம் ஆண்டுக்கு பிறகு பிரெஞ்சு ஓபன் கால் இறுதியில் கால்பதித்த இளம்வீராங்கனை என்ற பெருமையும் கோகோ காஃபுக்கு கிடைத்துள்ளது. கடைசியாக அமெரிக்காவின் ஜெனிபர் கேப்ரியாட்டி 1993-ல் கால் இறுதியில் விளையாடியிருந்தார்.