FrontPg

மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளுக்கு - வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியீடு : பள்ளிகல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

செய்திப்பிரிவு

ஆன்லைன் வகுப்புகளுக்கு விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளி யிடப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

மாணவர்களின் உடல்நலனை யும், மனநலனையும் கருத்தில்கொண்டு தான் பிளஸ் 2 பொதுத்தேர்வை முதல்வர் ரத்து செய்துள்ளார். இதைத் தொடர்ந்து, பிளஸ் 2 மாணவர்களுக்கு எந்த முறையில் மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் தலைமையில் குழு அமைக்கப் பட்டுள்ளது. அந்த குழுவில் உயர் கல்வித் துறை செயலர், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். அந்த குழுவினர் சொல்லும் வழிமுறைகளின்படி, பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங் கப்படும்.

பள்ளி மாணவர்களுக்கான ஆன் லைன் வகுப்புகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளின் வரைவு ஏற்கெனவே உருவாக்கப்பட்டுவிட்டது. அதற்கு முதல்வரின் ஒப்புதல் பெறப்பட்டதும் அது விரைவில் வெளியிடப்படும். தனியார் பள்ளிகளில் ஏற்கெனவே ஆன்லைன் வகுப்புகளை தொடங்கி யுள்ளனர். அரசுப் பள்ளி மாணவர் களுக்கு எப்போது ஆன்லைன் வகுப்பு களை தொடங்குவது, எப்போது பாடப் புத்தகங்கள் வழங்குவது என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம்.

திமுக எதிர்க்கட்சியாக இருந்த போதும் நீட் தேர்வை எதிர்த்தது. ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னரும் நீட் தேர்வை எதிர்க்கிறோம். நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்பதுதான் அரசின் நிலைப்பாடு. திமுக தேர்தல் அறிக்கையிலும் நீட் தேர்வு ஒழிப்பு இடம்பெற்றுள்ளது. எந்தச் சூழலிலும் நீட் தேர்வு தமிழகத்தில் வரக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பிரதமருக்கு முதல்வர் எழுதியுள்ள கடித்திலும் நீட் தேர்வு உட்பட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.

SCROLL FOR NEXT