Regional02

இருசக்கர வாகனத்தில் 150 மதுபாட்டில் கடத்தியவர் கைது :

செய்திப்பிரிவு

கர்நாடகாவில் இருந்து இருசக்கர வாகனத்தில் 150 மதுபாட்டில்களை கடத்தியவரை, மத்தூர் போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் மத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே போலீஸார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனர். அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர், கர்நாடக மாநிலத்தில் இருந்து 150 மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரிந்தது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து மத்தூர் போலீஸார், ஊத்தங்கரையைச் சேர்ந்த பெருமாள் (47) என்பவரை கைது செய்தனர். மேலும், 150 மதுபாட்டில்களுடன் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT