Regional01

கடலூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாத 30 ஆயிரம் பேர் மீது வழக்கு :

செய்திப்பிரிவு

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாத 30 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரோனா பரவலை தடுக்க தமிழ்நாடு அரசு ஊரடங்கை அறிவித்தது. மேலும், நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் வெளியில் வரும்போது முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடை பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கரோனா நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கடந்த 09.04.21 முதல் நேற்று வரை முகக்கவசம் அணியாத 30 ஆயிரத்து 404 பேர் மீதும், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் 1,758 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராத தொகை ரூ.69 லட்சத்து 58 ஆயிரத்து 800 பெறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT