பெங்களூருவில் இருந்து சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட தக்காளி கூடையை சோதனையிடும் போலீஸார். 
Regional01

தக்காளி கூடையில் மது கடத்தல் : திருக்கோவிலூரில் 3 பேர் சிக்கினர் :

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி: பெங்களூருவில் இருந்து தக்காளி கூடைக்குள் மது பாட்டில்கள் கடத்தி வந்த 3 பேரிடம் திருக்கோவிலூர் போலீஸார் விசாரணை நடத்தினர்.

திருக்கோவிலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார் நேற்று திருக்கோவிலூர் மண்டப கூட்டுரோடு சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.பெங்களூருவில் இருந்து ஏற்றி வந்த தக்காளி கூடை கூடையாக வைக்கப்பட்டிருந்து. இதையடுத்து தக்காளிக் கூடைகளை போலீஸார் சோதனையிட்டனர். அதில் 1,680 மதுபாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மதுபாட்டில்களை போலீஸார், பறிமுதல் செய்தனர். அவற்றைக் கடத்தி வந்ததாக பெங்களூருவைச் சேர்ந்த வாகன ஓட்டுநர் சரத் (28), செஞ்சியைச் சேர்ந்த விஜய்(21) மற்றும் வேங்கூரைச் சேர்ந்த சரவணன்(32) ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT