த.செந்தில்குமார். 
Regional02

ரவுடியிசம், கட்டப் பஞ்சாயத்து செய்தால் குண்டர் சட்டம் பாயும் : சிவகங்கை புதிய எஸ்.பி. எச்சரிக்கை

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்ட எஸ்பியாக இருந்த ராஜராஜன் நெல்லை மாநகர துணை ஆணையராக நியமிக்கப்பட்டார். திருச்சி ரயில்வே எஸ்பியாக இருந்த த.செந்தில்குமார் சிவகங்கை மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கரோனா பரவலைத் தடுக்க அரசு அறிவித்த உத்தரவுகள் முழுமையாக செயல்படுத்தப்படும். ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து செய்வோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் தங்கள் பிரச் சினைகள் குறித்து 8608600100 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும், 9498110044 என்ற மொபைல் எண்ணிலும் தெரிவிக்கலாம் என்று கூறினார்.

SCROLL FOR NEXT