சாத்தூரைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவருக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், அக்குழந்தை உடல் நலமின்றி காணப்பட்டது. பரிசோதனையில் குழந்தைக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அக்குழந்தையை தனி அறையில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் மீசலூரைச் சேர்ந்த 16 வயது சிறுமி, திருத்தங்கல்லைச் சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் 17 வயது சிறுமி, சாத்தூரைச் சேர்ந்த 16 வயது சிறுவன், காரியாபட்டியைச் சேர்ந்த 13 வயது சிறுவனுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.