சேலம் மாவட்டத்தில் நேற்று 997 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில், சேலம் மாநகராட்சி பகுதியில் 285 பேரும், நகராட்சிப் பகுதிகளில் ஆத்தூரில் 9, மேட்டூரில் 13, எடப்பாடியில் 8, நரசிங்கபுரத்தில் 6 பேரும், வட்டார அளவில் சங்ககிரியில் 56, மகுடஞ்சாவடியில் 48, ஓமலூரில் 40, காடையாம்பட்டியில் 42, வீரபாண்டியில் 35, தாரமங்கலத்தில் 48, எடப்பாடியில் 53, சேலத்தில் 32, அயோத்தியாப்பட்டணத்தில் 45, பனமரத்துப்பட்டியில் 31, பெத்தநாயக்கன்பாளையத்தில் 52, தலைவாசலில் 23, வாழப்பாடியில் 25, கெங்கவல்லியில் 19, ஆத்தூரில் 12, நங்கவள்ளியில் 17, கொங்கணாபுரத்தில் 13, நங்கவள்ளியில் 17, பிற மாவட்டங்களில் இருந்த வந்தவர்களில் 61 பேர் என மாவட்டம் முழுவதும் 997 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 2,392 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்தனர்.
சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி, ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1646 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சிகிச்சை பெற்று வந்த 2392 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 19 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் தற்போது 14 ஆயிரத்து 712 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.