திருச்சி மாநகரில் இன்றும், நாளையும்(ஜூன் 8,9) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திருச்சி மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மாநகராட்சி சுகாதாரத் துறை சார்பில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில், திருச்சி மாநகரில் இன்று முதல் காய்ச்சல் பரிசோதனை முகாம் தொடங்கவுள்ளது. இன்றும், நாளையும் முகாம் நடைபெறும் இடங்கள் விவரம் (வார்டு- இடம் என்ற அடிப்படையில்):
இன்று (ஜூன் 8): 22 தர்மநாதபுரம் சர்ச், 53 உய்யக்கொண்டான்திருமலை, 49 சின்னசாமி தெரு, 34 டிவிஎஸ் டோல்கேட் என்எம்கே காலனி, 41 கிராப்பட்டி பாரதியார் நகர், 16 வெள்ளை வெற்றிலைக் காரத் தெரு.
மாலை: 48 பக்காளித் தெரு, 22 கீழ படையாச்சித் தெரு அங்கன்வாடி மையம், 58 கல்யாண் தெரு, 52 சிவானந்தா பாலாலயா பள்ளி, 49 இதாயத் நகர், 4 நெல்சன் ரோடு, 3 ராம் நகர் நரியான் தெரு, 37 செம்பட்டு, 34 டிவிஎஸ் டோல்கேட் திருவள்ளுவர் தெரு, 9 காந்தி நகர் அங்கன்வாடி மையம், 14 கருவாட்டுப்பேட்டை, 36 மலையடிவாரம், 41 கிராப்பட்டி பிள்ளையார் கோயில் தெரு, 61 பர்மா காலனி, 16 சவுராஸ்டிரா தெரு, 64 காவேரி நகர்.
நாளை(ஜூன் 9) காலை: 24 காஜாபேட்டை அங்கன்வாடி மையம், 52 வண்ணாரப்பேட்டை, 51 சவேரியார் கோயில் தெரு, 1 மூலத்தோப்பு அங்கன்வாடி மையம், 42 காஜாமலை நூலகம், 40 பிராட்டியூர், 12 எல்லை மாரியம்மன் கோயில் தெரு.
நாளை மாலை: 24 ஆத்துக்காரத் தெரு, 60 கல்லறை மேட்டுத் தெரு, 52 அமைதி இல்லம், 51 ஆண்டவர் காலனி, 5 வீரேஸ்வரம், 1 திருவடி தெரு, 13 பாபு ரோடு அங்கன்வாடி மையம், 14 அலங்கநாதபுரம் பூக்கொல்லை, 32 பொன்மலை ஆர்மரி கேட், 40 காவேரி நகர், 56 செங்குளத்தான் கோயில் தெரு, 28 நேதாஜி நகர், 12 நேரு தெரு, 65 செல்வபுரம்.