Regional01

நிவாரண உதவி வழங்கக் கோரி ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

திருச்சி: நிவாரண உதவி வழங்கக் கோரி சிஐடியு ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் திருச்சியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சந்திரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், ரயில் பயணிகள், அரசு அலுவலர்கள், மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோர் வேலைக்குச் சென்று திரும்பும் ஆட்டோக்களை அனுமதிக்க வேண்டும். போலீஸார் பறிமுதல் செய்த ஆட்டோக்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். வங்கி, மைக்ரோ பைனான்ஸ் கடன் தவணைகளைச் செலுத்த 6 மாத காலம் அவகாசம் அளிக்க வேண்டும். ஊரடங்கால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மூலம் ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், ஆட்டோ ஓட்டுநர் சம்மேளன மாநிலப் பொதுச் செயலாளர் சிவாஜி உட்பட ஆட்டோ ஓட்டுநர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர்.

SCROLL FOR NEXT