Regional01

சட்டப் படிப்பு தொடர்பாக இணையவழி கருத்தரங்கு :

செய்திப்பிரிவு

திருச்சி ஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் சட்டப்படிப்பு ஒரு தங்கச் சுரங்கம் என்ற தலைப்பில் இணையவழிக் கருத்தரங்கம் ஜூன் 5-ம் தேதி நடைபெற்றது.

கருத்தரங்குக்கு பள்ளிச் செயலாளர் கோ.மீனா தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை செயல் அலுவலர் கு.சந்திரசேகரன், இயக்குநர் அபர்ணா, பள்ளி முதல்வர் ரேணுகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் பி.பிரகாஷ், சட்டப்படிப்பு ஒரு தங்கச்சுரங்கம் என்ற தலைப்பில் பேசும்போது, சட்டப்படிப்பில் எவ்வாறு சேருவது, கல்லூரிகள் எங்கெங்கு உள்ளன. விண்ணப்பிக்கும் முறைகள், சட்டத்தில் எதை செய்ய வேண்டும், எதை தவிர்க்க வேண்டும். சட்டத்தில் உள்ள குற்றப் பிரிவுகள், பொதுப் பிரிவுகள், சட்டப்படிப்பில் உள்ள இளநிலை, முதுநிலை படிப்புகள் உள்ளிட்டவை குறித்து விளக்கினார்.

மேலும், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்காடும் முறைகள், அகில இந்திய பார் கவுன்சில் நடத்தும் தேர்வுகளை எழுதும் முறைகள், சட்டப்படிப்பில் உள்ள வெற்றி வாய்ப்புகள் ஆகியவை குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். மாணவர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கும் அவர் விளக்கமளித்தார்.

முன்னதாக பள்ளியின் முதுநிலை முதல்வர் எஸ்.லட்சுமணன் வரவேற்றார். நிறைவாக ஆசிரியர் சரோஜினி நன்றி கூறினார்.

கருத்தரங்கில் சந்தானம் வித்யாலயா, ஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சங்கரா மெட்ரிக் பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்த 90-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT