தென்காசி: தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதியமாவட்டம் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ம் தேதி உருவாக்கப்பட்டது. தென்காசி மாவட்ட முதல் காவல் கண்காணிப்பாளராக சுகுணாசிங் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த கிருஷ்ணராஜ் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இடமாற்றம் செய்யப்பட்ட எஸ்பி சுகுணாசிங்குக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பிரிவு உபசார விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சமீரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலிவரதன், டிஎஸ்பிகள், இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர்.