வேலூர் சரக டிஐஜியாக ஏ.ஜி.பாபு பொறுப்பேற்றுக் கொண்டார். 
Regional01

வேலூர் சரகத்தில் சட்ட விரோத செயல்கள் தடுக்கப்படும்; டிஐஜி ஏ.ஜி.பாபு நம்பிக்கை :

செய்திப்பிரிவு

வேலூர்: வேலூர் சரகத்தில் சட்ட விரோத குற்ற செயல்கள் தடுக்கப்படும் என டிஐஜி ஏ.ஜி.பாபு தெரிவித்தார்.

வேலூர் சரக டிஐஜியாக இருந்த காமினி, மதுரை சரகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, காவல் துறை நிர்வாக பிரிவு டிஐஜியாக இருந்த ஏ.ஜி.பாபு வேலூர் சரகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் ஏ.ஜி.பாபு கூறும்போது, ‘‘பொது மக்களிடத்தில் காவல் துறை நல்லுறவை கொண்டிருக்க வேண்டும். காவல் துறைக்கும், பொது மக்களுக்குமான இடைவெளியை குறைக்க வேண்டும். காவலர்கள், பொது மக்களுக்கான பணியாளர்கள் என்பதை உணர வேண்டும். இதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். அதேபோல், மாவட்டத்தில் காட்டன் சூதாட்டம், மணல் கடத்தல், சாராயம் போன்ற சட்டத்துக்கு புறம்பான குற்றச்செயல்கள் தடுக்கப்படும்’’ என்றார்.

SCROLL FOR NEXT