Regional01

7 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் :

செய்திப்பிரிவு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் 7 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலகில் வட்டாட்சியர் பணியமைப்பில் நிர்வாக நலன் கருதி 7 வட்டாட்சியர்கள் பணியிடம் மாற்றம் செய்யப்படுகின்றனர். அதன்படி, திருப்பத்தூர் மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளராக இருந்த கிருஷ்ணவேணி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளராகவும் (பொது), திருப்பத்தூர் ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியராக இருந்த பத்மநாபன், மாவட்ட ஆட்சியர் அலுவலக நீதியல் மேலாளராகவும், அப்பணியில் இருந்த குமாரி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் தனி வட்டாட்சியராகவும், ஆம்பூர் சமூக பாதுகாப்பு திட்டத்தின் தனி வட்டாட்சியராக இருந்த மகாலட்சுமி, நாட்றாம்பள்ளி வட்டாட்சியராகவும், அங்கு வட்டாட்சியராக இருந்த சுமதி, திருப்பத்தூர் மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளராகவும், ஆம்பூர் நகர் நிலவரித்திட்ட தனி வட்டாட்சியர் சாந்தி, ஆம்பூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகவும், ஏலகிரி மலை அத்தனாவூர் நில வரித்திட்டத்தின் தனி வட்டாட்சியர் சுரேஷ், ஆம்பூர் நகர நில வரித்திட்ட தனி வட்டாட்சியராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள வட்டாட்சியர்கள் உடனடியாக பொறுப்பு ஏற்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT