ஈரோடு மாநகராட்சியில் குடியிருப்புப் பகுதிகளுக்கு ஆட்டோவில் வரும் ஆய்வகப் பணியாளர்கள் வீடுகளிலேயே கரோனா பரிசோதனை மேற்கொள்கின்றனர். 
Regional01

ஈரோடு மாநகராட்சியில் 10 ஆட்டோக்களில் பயணம் - ஆய்வகப் பணியாளர்கள் கவச உடையுடன் வீடுகளுக்கு சென்று கரோனா பரிசோதனை :

செய்திப்பிரிவு

குடியிருப்புப் பகுதிகளுக்கு 10 ஆட்டோக்களில் சென்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் திட்டத்தை ஈரோடு மாநகராட்சி தொடங்கியுள்ளது.

ஈரோடு மாநகராட்சியில் கரோனா தொற்றினை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நூறு வீடுகளுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு, கரோனா அறிகுறிகள் உள்ளனவா என கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்காக நான்கு மண்டலங்களிலும் 1400 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், குடியிருப்புப் பகுதிகளுக்கு ஆட்டோக்கள் மூலம் ஆய்வகப் பணியாளர்களை அனுப்பி கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் திட்டத்தை ஈரோடு மாநகராட்சி தொடங்கியுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் கூறியதாவது:

களப்பணியாளர்கள் மூலம்கரோனா அறிகுறி கண்டறியப் பட்டவர்களுக்கு, அன்றைய தினமே பரிசோதனை மேற்கொள்ளப் படுகிறது. அதன் முடிவுகள் வரும் வரை அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி விடுகிறோம். பரிசோதனை முடிவில் தொற்று கண்டறியப்பட்டால், நோயின் தன்மைக்கு ஏற்ப அரசு மருத்துவ மனைக்கும், தற்காலிக கரோனா சிகிச்சை மையங்களுக்கும் அனுப்பி வைக்கிறோம். அவர்கள் விருப்பத்தின் பேரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கிறோம்.

இப்பணியை விரைவுபடுத்தும் வகையிலும், வீட்டை விட்டு மருத்துவமனைக்கு வர முடியாதநிலையில் உள்ளவர்களுக்காக வும், அவர் களது வீடுகளிலேயே கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக மாநகராட்சி யில் 10 ஆட்டோக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆட்டோக்களிலும் ஒரு ஆய்வகப் பணியாளர் இருப்பார். கவச உடையணிந்த அவர்கள் அறிகுறி உள்ளவர் களிடம் இருந்து மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பிவைப்பார்கள். பொதுமக்களிடம் கிடைக்கும் வரவேற் பிற்கு ஏற்ப ஆட்டோக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT