சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருந்து வணிகர் சங்கம் சார்பில் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. 
Regional01

சிதம்பரம் மருந்து வணிகர்கள் மருத்துவ உபகரணம் வழங்கல் :

செய்திப்பிரிவு

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிதம்பரம் உட்கோட்ட மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான மருந்து, மாத்திரை மற்றும் மருத்துவ உபகரணங்களை சிதம்பரம் சார்- ஆட்சியர் மதுபாலனிடம் சங்க நிர்வாகிகள் நேற்று வழங்கினர்.

மருந்தாளுநர் சங்க பொதுச் செயலாளர் வெங்கடசுந்தரம், மொத்த வணிகப் பிரிவு தலைவர் பிரகாஷ், சிதம்பரம் வட்டாரசெயலாளர் பாலமுருகன், பொருளாளர் கண்ணன், மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் உள்ளிட் டவர்கள் பலர் கலந்து கொண்டனர். மருந்து, மாத்திரைகளை வழங்கிய சங்க நிர்வாகிகளுக்கு சிதம்பரம் சார் ஆட்சியர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

SCROLL FOR NEXT