சாராயம் கடத்தியதாக இருவரை கைது செய்த கள்ளக்குறிச்சி போலீஸார். 
Regional02

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாராயம் கடத்திய 4 பேர் கைது :

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாராயம் கடத்திய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கீழ்குப்பம் காவல் நிலைய போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் வீரபயங்கரம் ஏரிக்கரைக்குச் சென்றுள்ளனர். அங்கு சாராயம் விற்ற பெரம்பலூர் மாவட்டம் எறையூர் கிராமத்தைச் சேர்ந்த அம்மாசி(38) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர். இதேபோன்று ஏரிக்கரை பகுதியில் சாராயம் விற்ற காளசமுத்திரம் தெற்கு காட்டுக்கொட்டாயைச் சேர்ந்த ராஜேந்திரன்(62) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் கள்ளக்குறிச்சி டிஎஸ்பி அலுவலகத்திற்கு கிடைத்த தகவலின் பேரில், கள்ளக்குறிச்சி போலீஸார் தண்டலை பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, பைக்கில் வந்த நபர்களை மறித்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் பல் லகச்சேரியைச் சேர்ந்த தங்கமணி (27) மற்றும் மருதுபாண்டி (23) என்பதும், அவர்களிடம் 55 லிட்டர் விஷ சாராயம் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து விஷ சாராயத்தை பறிமுதல் செய்த போலீஸார் இருவரையும் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT