Regional02

குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் - 80 வாகனங்களில் காய்கறி, பழங்கள் விற்பனை :

செய்திப்பிரிவு

குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் 80 வாகனங்களில் காய்கறி விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் குறிஞ்சிப்பாடி பகுதி மக்களுக்கு காய்கறிகள், பழங்கள் தடையின்றி கிடைக்க வட்டார தோட்டக் கலை துறைசார்பில் 80 மேற்பட்ட வாகனங்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. தோட்டத்துக்கே நேரடியாக சென்று காய்களை வாங்கி, பொதுமக்களுக்கு தரமாகவும், விலை குறைவாகவும் வழங்கி வருகின்றனர். இதனை குறிஞ்சிப்பாடி தோட்டக்கலை உதவி இயக்குநர் சங்கீதா தலைமையிலான குழு தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT